id
related bits
0
processing priority
4
site type
3 (personal blog or private political site, e.g. Blogspot, Substack, also small blogs on own domains)
review version
11
html import
20 (imported)
first seen date
2025-04-20 14:51:28
expired found date
-
created at
2025-04-20 14:51:28
updated at
2025-11-30 22:53:07
length
24
crc
39825
tld
2211
nm parts
0
nm random digits
0
nm rare letters
0
is subdomain of id
13642151 (wordpress.com)
previous id
0
replaced with id
0
related id
-
dns primary id
0
dns alternative id
0
lifecycle status
0 (unclassified, or currently active)
deleted subdomains
0
page imported products
0
page imported random
0
page imported parking
0
count skipped due to recent timeouts on the same server IP
0
count content received but rejected due to 11-799
0
count dns errors
0
count cert errors
0
count timeouts
0
count http 429
0
count http 404
0
count http 403
0
count http 5xx
0
next operation date
-
server bits
—
server ip
-
mp import status
20
mp rejected date
-
mp saved date
-
mp size orig
213870
mp size raw text
28130
mp inner links count
4
mp inner links status
10 (links queued, awaiting import)
title
மலர்வனம்
description
என் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம்
image
site name
மலர்வனம்
author
updated
2026-03-03 21:10:19
raw text
மலர்வனம் | என் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம் மலர்வனம் என் எண்ணங்களை எழுத்தில் சேமிக்கும் இடம் Skip to content Home About என் நூல்கள் ← Older posts நீளும் பிரார்த்தனைகள் Posted on April 5, 2025 by லக்ஷ்மி பாலகிருஷ்ணன் நூல்: இதோ நம் தாய் ஆசிரியர்: வயலட் பதிப்பகம்: சால்ட் விலை:125/- ********************** புத்தரின் சொற்களைத் தன் நினைவிலிருந்து மீட்டெடுத்து, தம்ம பிடகத்தை கட்டமைத்த ஆனந்தரின் கதையிலிருந்து நாவல் தொடங்குகிறது. பிணி, மூப்பு, மரணம் ஆகியவற்றை துக்கத்தின் காரணிகளாகக் கண்டறிந்து, அவற்றிலிருந்து விடுபடுதலையே வீடு பேறென வகுத்த புத்தரின் உடற் பிணி குறித்து கவலையில் ஆழ்ந்திருக்கும் ஒருவராக அவர் அறிமுகம் ஆகிறார். நிகரற்ற நினைவாற்றல், அர்ப்பணிப்புணர்வு, கருணை என நற்குணங்களால் நிரம்பியிருந்தும் பரிநிர்வாண நிலையை அடைய முடியாது தவித்த ஆனந்தரின் தவிப்பு அன்பினால் விளைந்தது. அதே அன்புதான் ஆனந்தியையும் துக்கத்தில் ஆழ்த்துகிறது. ஆனந்தி, யசோதா, கௌதமி என சித்தார்த்தரின் வாழ்வில் தொடர்புடைய பெயர்களே சமகாலத்தில் நிகழும் கதையிலும் புழங்குகின்றன. மரபான க...
redirect type
0 (-)
block type
0 (no issues)
detected language
123 (uncertain Polish)
category id
index version
1
spam phrases
0
text nonlatin
21514
text cyrillic
0
text characters
14285
text words
9631
text unique words
688
text lines
516
text sentences
232
text paragraphs
80
text words per sentence
41
text matched phrases
0
text matched dictionaries
0
links self subdomains
0
links other subdomains
0
links other domains
2 - commonfolks.in, amazon.in
links spam adult
0
links spam random
0
links spam expired
0
links ext activities
0
links ext ecommerce
0
links ext finance
0
links ext crypto
0
links ext booking
0
links ext news
1
links ext leaks
0
links ext ugc
28 - s0.wp.com, wp.me, s1.wp.com, wordpress.com
links ext klim
0
links ext generic
1
dol status
0
dol updated
2026-03-03 21:10:19
rss status
32 (unknown)
rss found date
2025-04-20 14:51:29
rss size orig
79292
rss items
10
rss spam phrases
0
rss detected language
126 (language undetectable (empty document, too short, or engines disagree))
inbefore feed id
-
inbefore status
0 (new)
sitemap path
sitemap status
40 (completed successful import of reports.txt file to table in_pages)
sitemap review version
2
sitemap urls count
37
sitemap urls adult
0
sitemap filtered products
0
sitemap filtered videos
0
sitemap found date
2025-04-20 14:51:29
sitemap process date
2025-11-08 21:34:25
sitemap first import date
-
sitemap last import date
2025-11-30 22:53:07