id
related bits
0
processing priority
4
site type
3 (personal blog or private political site, e.g. Blogspot, Substack, also small blogs on own domains)
review version
11
html import
20 (imported)
first seen date
2024-10-23 13:23:39
expired found date
-
created at
2024-10-23 13:23:35
updated at
2026-02-18 02:27:03
length
27
crc
48785
tld
2211
nm parts
0
nm random digits
0
nm rare letters
0
is subdomain of id
13642151 (wordpress.com)
previous id
0
replaced with id
0
related id
-
dns primary id
0
dns alternative id
0
lifecycle status
0 (unclassified, or currently active)
deleted subdomains
0
page imported products
0
page imported random
0
page imported parking
0
count skipped due to recent timeouts on the same server IP
0
count content received but rejected due to 11-799
0
count dns errors
0
count cert errors
0
count timeouts
0
count http 429
0
count http 404
0
count http 403
0
count http 5xx
0
next operation date
2024-10-23 14:23:40
server bits
—
server ip
-
mp import status
20
mp rejected date
-
mp saved date
-
mp size orig
184843
mp size raw text
8393
mp inner links count
8
mp inner links status
20 (imported)
title
வே.மதிமாறன் கவிதைகள்
description
கவிதைகள்
image
site name
வே.மதிமாறன் கவிதைகள்
author
updated
2026-02-16 11:51:05
raw text
வே.மதிமாறன் கவிதைகள் | கவிதைகள் பட்டி பொருளடக்கத்திற்கு தாவுக இல்லம் நான் வே.மதிமாறன் கவிதைகள் கவிதைகள் ஈவ்டீசிங் Posted on திசெம்பர் 3, 2007 by வே.மதிமாறன் பதிவின் வடிவம் மறுமொழி “ ச்சீ.. பொம்பளைங்க நிம்மதியா வெளியே போயிட்டு வரமுடியுதா ? குறுக்க வந்த ஆபாசமா பேசுறான். பின்னால வந்து துணிய புடிச்சு இழுக்கிறான். கூட்டத்துல உரசுறான் ஆம்பிளைக்கு இதுதான் அழகுன்னு நினைப்புப் போல ரொம்ப பொறுக்கித்தனமா போச்சு நாடு” பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டித்து காலையில் பக்கத்து விட்டு பாபு அம்மாவிடம் ஆவேசப்பட்ட அம்பிகா அத்தைதான் மாலை வீட்டில் டீ.வியின் முன் பவ்யமாக அமர்ந்து குகி. கூவமின் ஆன்மீக அருளுரை கேட்டுக் கொண்டிருந்தாள் “ என்ன பண்ணார் தெரியுமோ நம்ம கிருஷ்ணர் , பெண்கள் குளிச்சிண்டுருந்த குளத்துக்குப் போய் அவா துணியெல்லாம் தூக்கிண்டு ஓடியாந்துட்டார். அதேபோல் நம்ம கந்தனும் மாறுவேஷம் போட்டுண்டு அவா அண்ணா விநாயகர் உதவியோட வள்ளியை ஓட , ஓட விரட்டி , விரட்டி காத...
redirect type
0 (-)
block type
0 (no issues)
detected language
126 (language undetectable (empty document, too short, or engines disagree))
category id
Pozostałe (16)
index version
1
spam phrases
0
text nonlatin
5098
text cyrillic
0
text characters
3440
text words
2327
text unique words
325
text lines
430
text sentences
64
text paragraphs
0
text words per sentence
36
text matched phrases
0
text matched dictionaries
0
links self subdomains
0
links other subdomains
0
links other domains
0
links spam adult
0
links spam random
0
links spam expired
0
links ext activities
0
links ext ecommerce
0
links ext finance
0
links ext crypto
0
links ext booking
0
links ext news
0
links ext leaks
0
links ext ugc
47 - s0.wp.com, wp.me, s1.wp.com, wordpress.com, mathimaran.wordpress.com, mathimaran.files.wordpress.com
links ext klim
0
links ext generic
0
dol status
0
dol updated
2026-02-16 11:51:05
rss status
32 (unknown)
rss found date
2024-10-23 13:23:40
rss size orig
106471
rss items
10
rss spam phrases
0
rss detected language
126 (language undetectable (empty document, too short, or engines disagree))
inbefore feed id
-
inbefore status
0 (new)
sitemap path
sitemap status
40 (completed successful import of reports.txt file to table in_pages)
sitemap review version
2
sitemap urls count
14
sitemap urls adult
0
sitemap filtered products
0
sitemap filtered videos
0
sitemap found date
2024-10-23 13:23:40
sitemap process date
2025-02-07 03:32:08
sitemap first import date
-
sitemap last import date
2025-12-05 07:44:14